சென்னை மெரினா கடற்கரை சாலையில் பைக் ரேசில் ஈடுபட்ட இளைஞர்களை விரட்டி பிடித்த போலீசார்

சென்னை மெரினா கடற்கரை சாலையில் பைக் ரேசில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் விரட்டி விரட்டி பிடித்து அதிரடி காட்டியுள்ளனர்.
சென்னை மெரினா கடற்கரை சாலையில் பைக் ரேசில் ஈடுபட்ட இளைஞர்களை விரட்டி பிடித்த போலீசார்
x
சென்னை மெரினா கடற்கரை சாலையில் இளைஞர்கள் பைக் ரேஸ் நடத்துவதும், விபத்துகளை ஏற்படுத்துவதும் வாடிக்கையான நிகழ்வாகவே மாறிப்போய்விட்டது. அதனை தடுக்கும் வகையில், போலீசார் தற்போது அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். நேற்று முன்தினம் சென்னையில் 29 இடங்களில் சோதனை தடுப்புகள் வைத்து ஆய்வு செய்த‌தில், மது அருந்தியவர்கள், அதிவேகமாக வாகனத்தை இயக்கியவர்கள், ஒரு வாகனத்தில் பலர் பயணித்த‌து என மொத்தம் 242  வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கார், பைக் என மொத்தம் 24 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில், நேற்று இரவும் 2 வது நாளாக போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது, பைக் ரேசில் ஈடுபட்ட ஏராளமான இளைஞர்கள் சிக்கினர். போலீசாரிடம் இருந்து இளைஞர்கள் தப்பி செல்வது, போலீசார் அவர்களை விரட்டி பிடிப்பது போன்ற அதிரடி காட்சிகள்  அரங்கேறின. பிடிக்கும் முயற்சியில் சாலையில் விழும் இளைஞர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக அருகிலே ஆம்புலன்ஸ் ஒன்றும் நிறுத்தப்பட்டிருந்த‌து.

Next Story

மேலும் செய்திகள்