துவாக்குடி சுங்கச் சாவடியில் என்ன நடந்தது?
சுங்கச் சாவடியில் கட்டண ரசீது குளறுபடியால் இரு தரப்பினருக்கு கை கலப்பு ஏற்பட்டது.
சுங்கச் சாவடியில் கட்டண ரசீது குளறுபடியால் இரு தரப்பினருக்கு கை கலப்பு ஏற்பட்டது. சென்னையிலிருந்து தஞ்சை நோக்கி இரண்டு கார்களில் சென்றவர்கள் துவாக்குடி சுங்கச் சாவடியில் சுங்க கட்டணம் செலுத்தி உள்ளனர். முதல் காரில் உள்ளவர்களே இரண்டு காருக்கும் சேர்த்து பணத்தை செலுத்தியதாக சொல்லப்படுகிறது. ஆனால் ஒரு காருக்கு மட்டுமே சுங்க கட்டணம் பதிவு செய்யப்பட்டதை காரில் இருந்தவர்கள் சிறிது தூரம் சென்ற பின்னரே கவனித்துள்ளனர். அதனையடுத்து திரும்பி வந்து சுங்க சாவடி ஊழியர்களிடம் கேட்டபோது, வாக்குவாதம் ஏற்பட்டு கை கலப்பாக மாறியது. அதன் காரணமாக சுங்க சாவடியில் வாகனங்கள் தேங்கியதால்அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
Next Story
