பைக் ரேஸ் பைக் வீலிங் செய்ய குவிந்த இளைஞர்கள் - பைக் ரேஸை தடுக்க அதிக அளவில் காவலர்கள் குவிப்பு

சென்னை மெரினா கடற்கரை சாலையில் நள்ளிரவில் பைக் ரேஸில் ஈடுபட இளைஞர்கள் வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
பைக் ரேஸ் பைக் வீலிங் செய்ய குவிந்த இளைஞர்கள் - பைக் ரேஸை தடுக்க அதிக அளவில் காவலர்கள் குவிப்பு
x
சென்னை மெரினா கடற்கரை சாலையில் நள்ளிரவில் பைக் ரேஸில் ஈடுபட இளைஞர்கள் வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனால் வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, தீவிர சோதனை நடத்தப்பட்டது. இருப்பினும், ஏராளமான இளைஞர்கள் நள்ளிரவில் மெரினா கடற்கரை சாலையில் குவிந்து பைக் ரேஸில் ஈடுபட முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அனுப்பி வைத்தனர். ஆனாலும் சில இளைஞர்கள் காவல்துறையினரின் சோதனையும் தாண்டி ஆபத்தான முறையில் பைக் ரேஸ், பைக் வீலிங் செய்வது போன்ற செயலில் ஈடுபட்டதால் நள்ளிரவில் மெரினா கடற்கரை சாலை பரபரப்பாக காணப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்