மீரா மிதுனின் தென்னிந்திய அழகி பட்டம் பறிப்பு

மீரா மிதுனின் தென்னிந்திய அழகி பட்டம் திடீரென அவரிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ள சம்பவம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
மீரா மிதுனின் தென்னிந்திய அழகி பட்டம் பறிப்பு
x
பெங்களூருவை சேர்ந்த தமிழ்செல்வி என்ற மீரா மிதுன், மிஸ் சவுத் இந்தியா, மிஸ் தமிழ்நாடு, மிஸ் கியூன் ஆப் சவுத் இந்தியா ஆகிய பட்டங்களை வென்றுள்ளார். இந்த நிலையில், சென்னை வடபழனியில் தமிழக பெண்கள் பங்குபெறும் மிஸ் தமிழ்நாடு திவா என்ற அழகி போட்டி ஒன்றை நடத்த உள்ளதாவும், அதனை தடுக்கும் விதமாக, போலீசார் உள்பட பலர் தனக்கு மிரட்டல் விடுத்துவருவதாகவும்,  கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.இது ஒருபுறம் இருக்க, மீரா மிதுனின் அழகி பட்டத்தை திரும்ப பெறுவதாக மிஸ் சவுத் இந்தியா நிறுவனம் , திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  மீரா மிதுன் அழகி பட்டத்தை வைத்து முறைகேடில் ஈடுபட்டதால் அதனை திரும்ப பெற்றுள்ளதாகவும், இதன்பிறகு தென்இந்திய அழகி பட்டத்தை அவர் பயன்படுத்த முடியாது எனவும் அந்நிறுவனம் தனது சமூக வலைதள பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் கடந்த 2016 ஆம் ஆண்டு, மீரா மிதுனுடன் போட்டியிட்டு 2 ஆம் இடம் பிடித்த சனம் பிரசாத் என்ற அழகிக்கு பட்டத்தை வழங்க மிஸ் சவுத் இந்தியா நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இந்த அதிரடி திருப்பங்களால், நாளை மறுநாள் மீரா மிதுன் திட்டமிட்டிருந்த மிஸ் தமிழ்நாடு திவா அழகி போட்டி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்