ரமலான் விடுமுறை முன்னிட்டு சிறப்பு மலை ரயில் : சுற்றுலாப் பயணிகளை கவர புதிய திட்டம்

ரமலான் பண்டிகையை முன்னிட்டு சுற்றுலா பயணிகளுக்காக மீண்டும் குன்னுார் முதல் ரன்னிமேடு வரை சிறப்பு மலை ரயில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இயக்கப்பட உள்ளது
x
நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக, தென்னக ரயில்வே பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய, வன விலங்குகள் உருவங்களுடன் கண்ணாடி மேற்கூரை கொண்ட சிறப்பு மலை ரயில் மே 27ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரை இயக்கப்பட்டது. இந்த சிறப்பு மலை ரயிலில், முதல் வகுப்பிற்கு 450 ரூபாயும்,, 2ம் வகுப்பிற்கு 320 ரூபாய்  கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. ஏராளமான சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து இந்த மலை ரயிலில் ஆர்வத்துடன் பயணம் மேற்கொண்டனர். தற்போது ரமலான் விடுமுறையின் போது,  நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்பதால், சிறப்பு மலை ரயில் மீண்டும் குன்னுாரிலிருந்து ரன்னிமேடு வரை வரும் திங்கள் முதல் வெள்ளி வரை இயக்கப்படுவதாக ‌தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

Next Story

மேலும் செய்திகள்