மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் திசையன்விளை கருவாடுக்கு கிராக்கி

மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் திசையன்விளை சந்தையில் கருவாடு விற்பனை சூடு பிடித்துள்ளது.
மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் திசையன்விளை கருவாடுக்கு கிராக்கி
x
மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால், திசையன்விளை சந்தையில் கருவாடு விற்பனை சூடு பிடித்துள்ளது. சரியான விகிதத்தில் உப்புக் கலவை, போதுமான காய்ச்சல் பக்குவம் என திசையன்விளை சந்தையில் கிடைக்கும் கருவாடுக்கு தனி மவுசு உண்டு. இந்த கருவாடுகளை பல்வேறு ஊர்களில் உள்ள உறவினர்களுக்கு வாங்கி அனுப்பும் நிலையில், கிராக்கி அதிகரித்துள்ளது. மீன்களின் வரத்தும் குறைந்துள்ளதால், கருவாடு உற்பத்தியும் குறைந்துள்ளது. உவரி, கூட்டப்பனை, கூடுதாழை, அமலிநகர் மற்றும் தூத்துக்குடி,ராமேஸ்வரம் பகுதிகளில் மீன்கள் கிடைக்காமையே இதற்கு காரணம்.நெத்திலி, சாளை, மஞ்சள்பாறை, கெண்டை, பாறை என ருசிமிகுந்த கருவாடுகள் கிடைக்கவில்லை.

Next Story

மேலும் செய்திகள்