திருப்பத்தூர் அருகே மனைவியை கொலை செய்த கணவன் தற்கொலை

திருப்பத்தூர் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக மனைவியை கத்தியால் வெட்டி கொலை செய்து விட்டு கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் அருகே மனைவியை கொலை செய்த கணவன் தற்கொலை
x
வேலூர் மாவட்டம் திருப்பபத்தூர்  அருகேயுள்ள குரிசிலாப்பட்டு கிராமத்தை சேர்ந்த முருகன் மற்றும் அவரது மனைவி சின்னபாப்பா இடையே சில நாட்களாக குடும்ப சண்டை இருந்து வந்துள்ளது.இந்த நிலையில், வழக்கம் போல் நடந்த குடும்ப சண்டையின் போது, முருகன், ஆத்திரத்தில் சின்னப்பாப்பாவை கத்தியால் கழுத்தில் வெட்டி கொலை செய்துள்ளார். அதில் படுகாயம் அடைந்த சினனப்பாப்பா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து முருகன் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்