கறந்த பாலை விற்க முடியாத விவசாயிகள் : பால் கொள்முதல் நிலையத்தை ஏற்படுத்த கோரிக்கை

தர்மபுரி மாவட்டம் வத்தல்மலையில் கறந்த பாலை விற்க முடியாததால் கால்நடைகளை விவசாயிகள் விற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கறந்த பாலை விற்க முடியாத விவசாயிகள் : பால் கொள்முதல் நிலையத்தை ஏற்படுத்த கோரிக்கை
x
மலை கிராமமான வத்தல்மலையில் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இந்த கிராமமக்களுக்கு விலையில்லா ஆடு, மாடுகள் தமிழக அரசால் வழங்கப்பட்டது. ஆனால், வத்தல்மலை கிராமத்தில் பாலை கொள்முதல் செய்யும் கூட்டுறவு சங்கம் இல்லை. போதுமான போக்குவரத்து வசதியும் இல்லாததால் கறக்கும் பாலை தனியார் ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் வேறு இடத்திற்கு விவசாயிகள் எடுத்து சென்று விற்பனை செய்கின்றனர். இதனால், போக்குவரத்திற்கே பாதி செலவாகி விடுவதால், லாபம் ஈட்ட முடியாத நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 4 மாடுகளை வைத்திருக்கும் விவசாயிகள், 2 மாடுகளை விற்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு வத்தல்மலையில் பால் கொள்முதல் கூட்டுறவு சங்கத்தை திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்