இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்பு

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூ. கே.பாலகிருஷ்ணன் பங்கேற்பு.
இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்பு
x
சென்னை தரமணியில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி, இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடு முழுவதும் பாஜக சரித்திர வெற்றி பெற்றிருப்பது எதிர்காலத்துக்கு மிகுந்த அச்சத்தை உருவாக்கி உள்ளது என்றார். தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள்  பிரச்சனைகளுக்காக நடத்திய போராட்டங்கள் தான் பிரதமர் மோடிக்கும், முதலமைச்சர் எடப்பாடிக்கும் தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்