லிப்ட் அறுந்து விழுந்ததில் இன்ஜினியர் பலி - இறப்பில் சந்தேகம்

பழனி அருகே தனியார் நிறுவனத்தில் லிப்ட் அறுந்து விழுந்ததில் இன்ஜினியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
லிப்ட் அறுந்து விழுந்ததில் இன்ஜினியர் பலி - இறப்பில் சந்தேகம்
x
பழனி அருகே  தனியார் நிறுவனத்தில் லிப்ட் அறுந்து விழுந்ததில் இன்ஜினியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சங்கன்செட்டி வலசு கிராமத்தில் வசித்து வரும் கருப்புசாமி, நிறுவனத்தின பராமரிப்பு பணிகளை பார்வையிட லிப்ட்டில் சென்றுள்ளார். அப்போது லிப்டின் ரோப் அறுந்து கீழே விழுந்ததில், தலையில் பலத்த காயமடைந்த கருப்புசாமி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். . இந்நிலையில், அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, கருப்புசாமியின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் பழனி - திண்டுக்கல் சாலையில் சுமார் இரண்டு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்