சுற்றுலா பயணிகளுக்காக 5 நாட்கள் இயக்கப்படும் குன்னூர் சுற்றுலா மலை ரயில்

சுற்றுலா பயணிகளை கவர, குன்னூரில் இருந்து ரண்ணிமேடு வரை 5 நாட்கள் சுற்றுலா மலை ரயில் இயக்கப்பட உள்ளது.
சுற்றுலா பயணிகளுக்காக 5 நாட்கள் இயக்கப்படும் குன்னூர் சுற்றுலா மலை ரயில்
x
சுற்றுலா பயணிகளை கவர, குன்னூரில் இருந்து ரண்ணிமேடு வரை 5 நாட்கள் சுற்றுலா மலை ரயில் இயக்கப்பட உள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னுார் - மேட்டுப்பாளையம் ரயில் பாதையில், கல்லார் முதல் குன்னுார் வரை பல் சக்கர தண்டவாளத்தில் நீராவி எஞ்சின் ரயில் இயக்கப்படுகிறது. மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே  ஒரு மலை ரயிலும், குன்னுார் - ஊட்டி இடையே நான்கு மலை ரயிலும் தற்போது இயக்கப்படுகின்றது. இந்த நிலையில் குன்னுார் - மேட்டுப்பாளையம் ரயில் பாதையில் உள்ள ரண்ணிமேடு பகுதிக்கு ரயில் இயக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை பரிசீலித்த தென்னக ரயில்வே சேலம் கோட்ட நிர்வாகம், குன்னூர் - ரண்ணிமேடு இடையே மலை ரயிலை இயக்க முடிவு செய்துள்ளது. இந்த ரயில் சேவை வரும்  27ஆம் தேதி துவங்கி 31 ஆம் தேதி வரை 5 நாட்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மலை ரயிலில் பயணிக்க அதிகபட்சமாக 450 ரூபாயும், குறைந்தபட்சமாக 320 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்