பெற்றோர் கண்முன்னே இளைஞர் ஒருவர் குத்தி கொலை

கோவை அருகே, பெற்றோர் கண்முன்னே இளைஞர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பெற்றோர் கண்முன்னே இளைஞர் ஒருவர் குத்தி கொலை
x
கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்த ஜான் பிரிட்டோ அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். அப்போது, மற்றொரு தரப்புக்கும், ஜான்பிரிட்டோவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள் இரண்டு  தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பிவிட்ட நிலையில், ஜான் பிரிட்டோ தனது நண்பன் ஒருவனுடன் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, மதுக்கடையில் சண்டையிட்ட நால்வர், பின் தொடர்ந்து வந்துள்ளனர். வீடு வந்த ஜான் பிரிட்டோவுடனும்,  அவரின் பெற்றோருடனும் அவர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர். திடீரென ஜான்பிரிட்டோவை சுற்றி வளைத்து கத்தியால் சரமாரியாக குத்தினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த ஜான்பிரிட்டோ பெற்றோர் கண்முன்னே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். காயம்பட்ட ஜான்பிரிட்டோவின் நண்பன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விசாரணையில், ஜான் பிரிட்டோ மீது கொலை வழக்கு நிலுவையில் உள்ளதும், தையல் தொழில் செய்துவரும் இவர், கஞ்சா வியாபாரி எனவும் தெரியவந்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்