மன்னர் கால பழமையான கட்டடங்களில் விரிசல்

மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட பாரம்பரியமிக்க அரண்மனை கட்டிடங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட கருவூலம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
மன்னர் கால பழமையான கட்டடங்களில் விரிசல்
x
புதுக்கோட்டையில், மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட பாரம்பரியமிக்க அரண்மனை கட்டிடங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட கருவூலம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. 
இந்த பழமையான கட்டிடங்களின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதுடன், அதன் வழியாக செடிகள் வளர்ந்து வருகின்றன. செடிகள் மரமாக வளர்ந்து கட்டிடத்தை இடிப்பதற்கு முன்பாக அதனை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கலைத்தன்மையோடு விளங்கிவரும் பழமையான கட்டிடங்களை பொதுப்பணித்துறை பாதுகாக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்