தனியார் பள்ளிகளில் இலவச கல்வி திட்டம் : 1,20,989 பேர் விண்ணப்பம்...

தமிழகத்தில் இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில், சேர 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்.
தனியார் பள்ளிகளில் இலவச கல்வி திட்டம் : 1,20,989 பேர் விண்ணப்பம்...
x
தமிழகத்தில் இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில், சேர 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். ஆர்.டி.இ., எனப்படும் இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், ஏழை, எளிய, பொருளாதாரத்தில் நலிந்த குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள், தனியார் பள்ளிகளில் 8 ம் வகுப்பு வரை சேர்ந்து இலவசமாக  கல்வி கற்பதற்கான  கட்டணங்களை, மத்திய, மாநில அரசுகள் ஏற்கின்றன. இதற்கான ஆன்லைன் பதிவு, கடந்த மாதம் 22 ம் தேதி துவங்கி, நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்தது. ஒரு லட்சத்து 21 ஆயிரம் காலியிடங்களுக்கு 1 லட்சத்து 20ஆயிரத்து 989 பேர்  விண்ணப்பித்துள்ளதாக, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன்  தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்