இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் விண்ணப்பம் : நாளை நள்ளிரவு 11.59 மணியுடன் காலக்கெடு முடிவு

தனியார் பள்ளிகளில் இலவச மற்றும் கட்டாய கல்விச் சட்டத்தின் கீழ் உள்ள 25 சதவிகித இடங்களுக்கு ஒரு லட்சத்து பத்தாயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன
இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் விண்ணப்பம் : நாளை நள்ளிரவு 11.59 மணியுடன் காலக்கெடு முடிவு
x
இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மொத்தம் உள்ள இடங்களில் 25 சதவிகித மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்க வேண்டும். இந்த அடிப்படையில் தமிழகத்தில் மொத்தம் ஒன்றரை லட்சம் இடங்கள் உள்ளன.இதில், சேருவதற்கு விண்ணம் செய்ய நாளையுடன் கடைசி நாள். இந்த நிலையில், ஒரு லட்சத்து10 ஆயிரம் குழந்தைகளை சேர்க்க ஆன்லைன் வழியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏழை, எளிய, பொருளாதாரத்தில் நலிந்த குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ஆர்.டி.இ., சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளில்,  இலவச மற்றும் கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் கல்வி வழங்குவதாக காட்டும் பள்ளிகள், நேரில் கட்டணங்களை பெற்று விடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கிராமப்புற பகுதிகளில் மக்களின் அறியாமையை பயன்படுத்தி இதுபோன்ற தவறுகள் நடப்பதாகவும், அதிகாரிகள் ஆய்வு செய்யுமாறும் பொதுமக்கள் கோரியுள்ளனர். இதனிடையே, நாளை நள்ளிரவு 12 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், கால நீட்டிப்பு இருக்காது என்றும் கல்வித்துறைfre தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்