8 ஆம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு - பி.எட். தேர்வை வேறு தேதிக்கு மாற்ற முடிவு
பதிவு : மே 17, 2019, 08:30 AM
ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன் 8 ந் தேதி நடைபெறுவதால், அன்று நடைபெற இருந்த பி.எட்., தேர்வு வேறு தேதிக்கு மாற்றம் செய்யப்படுவதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வு ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. நடப்பாண்டில் பி.எட்., இரண்டாவது ஆண்டு பயிலும் மாணவர்களும் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதலாம் என தமிழக அரசு அறிவித்ததை அடுத்து, பி்எட்., மாணவர்களும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பம் செய்திருந்தனர்.  ஆனால் பி எட்.,  தேர்வு நடக்கும் நாளன்றே ஆசிரியர் தகுதித் தேர்வும் நடக்கும் என அறிவிக்கப்பட்டதால் மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து உயர்கல்வித்துறை செயலாளருடன் நடந்த  ஆலோசனைக்கு பின்னர், பி.எட்., தேர்வினை வேறு தேதிக்கு மாற்ற உள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழக பதிவாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத் ராம்சர்மாவும் அதனை உறுதி செய்துள்ளார். அதனையடுத்து பி.எட்., மாணவர்களும் தேர்வு எழுதும் நிலை ஏற்பட்டுள்ளது.

பிற செய்திகள்

எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள்?

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிகை விபரங்களை தற்போது காணலாம்..

170 views

"பீனிக்ஸ் பறவை போல மீண்டும் எழுந்து நிற்போம்" - தினகரன்

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் மக்கள் அளித்த தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம் என அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

37 views

தேசிய அந்தஸ்தை இழக்கும் இடதுசாரிகள்

நாட்டின் மிக பழமையான கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் தேசிய கட்சி அந்தஸ்த்தை இழக்கும் நிலை உருவாகியுள்ளது.

152 views

மத்திய சென்னை, திருச்சியில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி

மத்திய சென்னை தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறனை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்தனர்.

16 views

39 ஆண்டுகளுக்கு பிறகு சேலத்தை கைப்பற்றிய தி.மு.க.

39 ஆண்டுகளுக்கு பிறகு சேலம் பாராளுமன்ற தொகுதியை திமுக கைப்பற்றியுள்ளது.

56 views

நெல்லை தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம் வெற்றி

நெல்லை தொகுதியில் திமுக வேட்பாளர் ஞானதிரவியம் ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 457 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.