சர்வதேச இயந்திரம் மற்றும் பொறியியல் தொழில் கண்காட்சி - 575 தொழில் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன

கோவை மாவட்டத்தில் ஜூன் மாதம் நடைபெறவுள்ள சர்வதேச இயந்திரம் மற்றும் தொழில் கண்காட்சி தொடர்பான ஆலோசனை கூட்டம் கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது.
சர்வதேச இயந்திரம் மற்றும் பொறியியல் தொழில் கண்காட்சி - 575 தொழில் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன
x
கோவை மாவட்டத்தில் ஜூன் மாதம் நடைபெறவுள்ள சர்வதேச இயந்திரம் மற்றும் தொழில் கண்காட்சி தொடர்பான ஆலோசனை கூட்டம் கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் கண்காட்சி தலைவர் பாலு, கொடிசியா தலைவர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்காட்சி குறித்து நிர்வாகிகளிடம் விளக்கம் அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாலு, கண்காட்சியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சீனா,டென்மார்க், ஜெர்மனி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா உட்பட 12 வெளிநாடுகளை சேர்ந்த 575 தொழில் நிறுவனங்களும், வல்லுநர்களும் கலந்து கொள்வதாக தெரிவித்தார். 800 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் கூறினார். 
அதனை தொடர்ந்து பேசிய கொடிசியா தலைவர் ராமமூர்த்தி கோவையில் ராணுவ தளவாட உற்பத்தி பூங்கா அமைய உள்ளதால் கண்காட்சி மூலம் வர்த்தகர்கள் தேவைக்கேற்ப தொழில் நுட்பங்களை அறிந்து  அதற்கு தகுந்தாற்போல் தொழிலை மேம்படுத்தி கொள்ள முடியும் என்றார்

Next Story

மேலும் செய்திகள்