தினகரன் பிரசாரத்துக்கு தடை கேட்டு மனு
பதிவு : மே 15, 2019, 10:03 AM
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் தினகரன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அ.தி.மு.க. சார்பில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம், மனு அளிக்கப்பட்டது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் தினகரன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அ.தி.மு.க. சார்பில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம், மனு அளிக்கப்பட்டது. அதில், சூலூர் பிரசாரத்தில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் மீது, தனி நபர் விமர்சனம் செய்ததாகவும்,  காவிரி மேலாண்மை வாரியம், எட்டு வழி சாலை திட்டம் தொடர்பாக நீதிமன்ற தீர்ப்புகளை விமர்சித்து பேசுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அவரது தேர்தல் பிரசாரத்தை தடை செய்ய  வேண்டும் என அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல் மனுவில் தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.