சேலம் ரவுடி கதிர்வேல் என்கவுன்டர் வழக்கு - சி.பி.ஐ.-க்கு மாற்ற உண்மை கண்டறியும் குழு கோரிக்கை

சேலத்தில் ரவுடி கதிர்வேல் என்கவுண்டரில் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என, உண்மை கண்டறியும் குழு கோரியுள்ளது.
சேலம் ரவுடி கதிர்வேல் என்கவுன்டர் வழக்கு - சி.பி.ஐ.-க்கு மாற்ற உண்மை கண்டறியும் குழு கோரிக்கை
x
சேலத்தில் ரவுடி கதிர்வேல் என்கவுண்டரில் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என, உண்மை கண்டறியும் குழு கோரியுள்ளது. காட்டூரை சேர்ந்த முறுக்கு வியாபாரி கணேசன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த கதிர்வேல், மே 2 ஆம் தேதி காரிப்பட்டி போலீசார் நடத்திய என்கவுன்டரில் உயிரிழந்தார். இதுதொடர்பாக உண்மை கண்டறியும் குழுவினர்,  கதிர்வேலின் குடும்பத்தினர், அரசு மருத்துவமனை முதல்வர் உள்ளிட்டோரிடம் 2 நாட்களாக விசாரணை நடத்தினர். என்கவுன்டர் நடத்தப்பட்டது போலி என்பதற்கான ஆதாரம்  உள்ளதாக தெரிவித்த குழுவின் தலைவர் மார்க்ஸ், அவற்றை தேசிய மனித உரிமை ஆணையம், நீதிமன்றம் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் வழங்க உள்ளதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்