அதிகரிக்கும் கோடையின் தாக்கம் : வேகமாக வறண்டு வரும் அணைகள்
பதிவு : மே 10, 2019, 11:56 AM
மாற்றம் : மே 10, 2019, 12:03 PM
அணைகள் வறண்டு விட்டதால் விவசாயம் மற்றும் குடிநீருக்கு தட்டுப்பாடு அதிகரிக்கும் நிலை உருவாகயுள்ளது.
தமிழகத்தின் பெரிய அணையான மேட்டூர் அணையில்  நீர்மட்டம் 51 அடியாக குறைந்துள்ளது. அதனால்  பண்ணவாடி  நீர் தேக்கத்தில்  மூழ்கியிருந்த நந்திசிலை மற்றும் கிறிஸ்தவ ஆலயத்தின் இரட்டை கோபுரம் ஆகியவை வெளியே  தெரிகின்றன.மேட்டூர் அணை கட்டப்பட்ட போது அங்கிருந்து வெளியேறிய மக்கள் விட்டுச் சென்றவை அவை. அணையின் நீர் மட்டம் 80 அடிக்கு கீழே குறையும் போது முதலில் கிறித்துவ ஆலயத்தின் கோபுரம் தெரியத்தொடங்கும். 71 அடியாக குறையும் போது ஜலகண்டேசுவர் ஆலயம் தெரியத்தொடங்கும். தற்போது அணையின் நீர்மட்டம் 51 அடியாக குறைந்ததையடுத்து பண்ணவாடி  நீர் தேக்கத்தில்  மூழ்கியிருந்த நந்திசிலை மற்றும் கிறிஸ்தவ ஆலயத்தின் இரட்டை கோபுரம் ஆகியவற்றின் பெரும் பகுதி வெளியே தெரிகிறது.தென்மாவட்டங்களை வளப்படுத்தி வரும் தாமிரபரணியும் தற்போது வறண்டு காட்சி அளிக்கிறது. நெல்லை மாவட்டத்தில் அதிக  கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் 15 அடி அளவிற்கு மட்டுமே தண்ணீர் உள்ளது.சேர்வலாறு அணையில் 40 அடி நீர்  மட்டுமே உள்ளது. இப்பகுதி மக்களுக்கு சற்றே ஆறுதல் அளிக்கும் வகையில் மணிமுத்தாறு அணையில் மட்டும்  தற்போது 70 அடிக்கு தண்ணீர் உள்ளது.நெல்லை மாவட்டத்தில்  கடையம் , ஆழ்வார்குறிச்சி உள்ளிட்ட பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குவது கடனா நதி மற்றும் ராமநதி அணைகள் தற்போது இரண்டு அணைகளும்  வறண்டு பாலைவனம் போல் காட்சியளிக்கின்றன. பொதுமக்களின் போராட்டத்திற்கு பிறகு அணையை தூர்வாருவதாக கூறி  சில ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு நாட்கள் மட்டுமே பணி நடந்த நிலையில், அந்த பணி கிடப்பில் போடப்பட்டது. அதன்பின்னர் இதுவரை தூர்வாரப்படாததால் அணைகள்  நீரின்றி பாலைவனம் போல் காட்சியளிக்கின்றன

தொடர்புடைய செய்திகள்

கடும் கோடை காரணமாக வறண்டு போன வனக்குட்டைகள் : தாகத்தில் தவிக்கும் வன உயிரினங்கள்

கடும் கோடை காரணமாக வனக்குட்டைகள் வறண்டு போய் உள்ளதால் விலங்குகள் தண்ணீர் இன்றி உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

37 views

குடிநீர் வழங்கவில்லை என்று குற்றச்சாட்டு - காலிகுடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டம்

சேலம் மாவட்டம், மஞ்சக்கல்பட்டி பகுதியில் கடந்த பல மாதங்களாக சரிவர குடிநீர் வழங்கப்படவில்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டது.

18 views

பிற செய்திகள்

பிள்ளையார்பட்டி : விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

29 views

திருவெறும்பூர் : காசி விஸ்வநாதர் கோயிலில் சூரிய வழிபாடு தொடக்கம்

திருச்சி திரு​வெறும்பூர் சர்க்கார்பாளையம் காசி விஸ்வநாதர் கோயிலில் ஆண்டுக்கு 3 முறை மட்டுமே நடைபெறும் சூரிய வழிபாடு வெகு விமர்சையாக தொடங்கியுள்ளது.

70 views

"பொருளாதார சீர்திருத்தங்களை செய்ய வேண்டும்" - ராமதாஸ் வலியுறுத்தல்

பொருளாதார சரிவை ஒப்புக்கொண்டு, சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

36 views

"எந்த மொழி படித்தாலும் தாய் மொழிக்கு முன்னுரிமை" - வெங்கய்யா நாயுடு பேச்சு

எந்த மொழி படித்தாலும் தாய் மொழிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.

41 views

உதகை : 2-வது நாளாக அதிரடிப்படை தீவிர சோதனை

தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கையை தொடர்ந்து, நீலகிரியில் 2-வது நாளாக அதிரடிப்படை தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளது.

27 views

தீவிரவாதிகள் ஊடுருவல் - தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு

தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கையை தொடர்ந்து, தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் 2-வது நாளாக கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

211 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.