இளைஞரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் : தப்பி ஓட முயன்று கைதிக்கு காலில் எலும்பு முறிவு

ஒகேனக்கல் துப்பாக்கி சூடு சம்பவத்தில் கைதாகியிருந்த செல்வம் , போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றபோது கால் உடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இளைஞரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் : தப்பி ஓட முயன்று கைதிக்கு காலில் எலும்பு முறிவு
x
தர்ம‌புரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே , கடந்த மே ஒன்றாம் தேதி முனுசாமி என்பவர் 4 பேர் கொண்ட மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து 7 தனிப்படைகள் அமைத்து கடந்த 6 நாட்களாக தேடி வந்த ஒகேனக்கல் போலீசார், நேற்று முன்தினம் வனப்பகுதியில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் செல்வம் என்பவரை கைது செய்தனர். அவரை சம்பவம் நடந்த பகுதிக்கு அழைத்து சென்ற போலீசார்,  பதுக்கி வைத்திருந்த, நாட்டு துப்பாக்கி மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர். இதையடுத்து செல்வத்தை அங்கிருந்து காவல்நிலையத்திற்கு அழைத்து செல்ல முயன்றபோது, அவர் திடீரென தப்பி ஓடியுள்ளார். அப்போது பாறையின் மேல் இருந்து குதித்தபோது, காலில் முறிவு ஏற்பட்டதால், செல்வத்திற்கு,  பொன்னகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில் செல்வத்தை நேரில் சந்தித்த மாவட்ட குற்றவியல் நடுவிர் நீதிமன்ற நீதிபதி கலைவாணி, தொடர் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்