இன்று 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்...

பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகிறது.
இன்று 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்...
x
பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள், இன்று வெளியாகிறது.  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வுகள், கடந்த மார்ச் மாதம் ஆறாம் தேதி தொடங்கி , 22ஆம் தேதி வரை நடந்தது.  ஒட்டு மொத்தமாக 7 ஆயிரத்து 278  பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து16 ஆயிரத்து 618  மாணவர்கள் தேர்வில் பங்கேற்றனர். சென்னை மாநகரில் மட்டும் 156 மையங்களில் 47 ஆயிரத்து 305 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். மாற்றுத் திறனாளி மாணவர்கள் 2 ஆயிரத்து 700 பேர், சிறைவாசிகள் 78 பேரும்11ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்றனர். இதற்கான முடிவுகள் இன்று காலை வெளியாகிறது என அரசு தேர்வுத்துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது. 
தேர்வுத்துறை இணைய தளங்களில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் பார்க்கலாம் என தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்