"அட்சயதிருதியை - நகைக்கடைகளில் அலைமோதும் கூட்டம்

அட்சயதிருதியை ஒட்டி, தமிழகத்தில் உள்ள பிரபல நகைக்கடைகளில், மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
x
அட்சயதிருதியை ஒட்டி,  தமிழகத்தில் உள்ள பிரபல நகைக்கடைகளில், மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.  இன்றைய தினம் நகை வாங்கினால், ஆண்டு முழுவதும் நகை பெருகும் என்ற நம்பிக்கையால்,  மக்கள் போட்டி போட்டு நகை வாங்கி செல்கின்றனர். வழக்கமாக 9 மணிக்கு திறக்கப்படும் நகைக்கடைகள் அட்சய திருதியை முன்னிட்டு, 6 மணி முதலே திறக்கப்பட்டன.    கடந்த ஆண்டுகளில், அட்சய திருதியை அன்று நகைவாங்கியதால், தங்கள் வீடுகளில், நகைகள் பெருகியுள்ளதாக, வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்