வீணாகும் நீரை ஏரி, குளங்களுக்கு திருப்ப திட்டம் வகுக்க ​வேண்டும் - தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை

எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம், பருவமழை காலங்களில் வீணாகும் நீரை ஏரி, குளங்களுக்கு திருப்பி விடுவது குறித்து குழு அமைக்க, சென்னை உயர் நீதிமன்றம், யோசனை தெரிவித்துள்ளது.
வீணாகும் நீரை ஏரி, குளங்களுக்கு திருப்ப திட்டம் வகுக்க ​வேண்டும் - தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை
x
எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம், பருவமழை காலங்களில் வீணாகும் நீரை ஏரி, குளங்களுக்கு திருப்பி விடுவது குறித்து குழு அமைக்க, சென்னை உயர் நீதிமன்றம், யோசனை தெரிவித்துள்ளது. ஈரோடு மாவட்டம், ஒலக்காட்டுபதி தடுப்பணையில் இருந்து கசியும் நீரை, சூரிய மின்சக்தி மோட்டார்கள் மூலம் குழாய் வழியாக, ஏரிகளுக்கு திருப்பிவிடுவதற்கான திட்டம் தமிழகத்தில் முதல்முறையாக அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் தொடங்கப்படவில்லை என கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நீதிபதி கிருஷ்ணகுமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வீணாகும் நீரை, ஏரி, குளங்களுக்கு  திருப்பி விடுவது தொடர்பான திட்டம் வகுக்க குழு அமைக்க வேண்டும் என அரசுக்கு நீதிபதி யோசனை வழங்கினார். 


Next Story

மேலும் செய்திகள்