முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் - பக்தர்கள் தரிசனம்
சிங்காரவேலர் கோயிலில் சித்திரை மாத கிருத்திகையை முன்னிட்டு முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
நாகை மாவட்டம் சிக்கலில் உள்ள சிங்காரவேலர் கோயிலில் சித்திரை மாத கிருத்திகையை முன்னிட்டு முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக சாமிக்கு பால், தேன், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், பழம் பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வள்ளி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த தீபாராதனை காட்டப்பட்டது.
Next Story

