திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை

திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மாலை பலத்த சூறை காற்று வீசியது.
திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை
x
திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மாலை பலத்த சூறை காற்று வீசியது. இதனால் ஏற்பட்ட புழுதிக் காற்று காரணமாக ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்து விழுந்தது. வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கீழே விழுந்தது. மேலும் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் அந்த வழியே சென்ற வாகன ஓட்டிகள் மிகவும் அவதியுற்றனர். பின்னர் திருவண்ணாமலை மற்றும் கலசப்பாக்கம், மங்கலம் பகுதிகளில் கனத்த மழை பெய்தது. இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டது. நேற்று அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் இன்று பலத்த காற்றுடன் மழை பெய்தது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Next Story

மேலும் செய்திகள்