ஒடிசாவில் இன்று கரையை கடக்கும் ஃபானி புயல்

ஃ பானி புயல், ஒடிசா மாநிலத்தில் இன்று கரை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பூரி நகரில் பயங்கர காற்றுடன் மழை பெய்து வருகிறது.
x
வங்கக் கடலில் உருவாகி, அதிதீவிர புயலாக மாறியுள்ள பானி புயல், ஒடிசா மாநிலம் பூரி மாவட்ட கடலோரப் பகுதியில் இன்று கரையைக் கடக்கிறது. அப்போது மணிக்கு 175 முதல் 186 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பு கருதி, 200 க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு கருதி  புவனேஸ்வர் விமான நிலையம் மூடப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உண​வு வழங்கப்பட்டு வருகிறது. முன்னேற்பாடுகள் குறித்து, ஒடிஷா முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஆய்வு செய்தார். கடலோர காவல் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில மீட்புப் படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். புயல் எச்சரிக்கை காரணமாக புரி கடற்கரை பகுதியில், பாதுகாப்பான இடங்களில் மீனவர்கள் தங்கள் படகுகளை நிறுத்தி வருகின்றனர். 


இதனிடையே பானி புயல் கரையை கடக்கவுள்ள மாநிலங்களில் மத்திய அரசு அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும், நிவாரணம், மீட்பு பணிகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் எனவும் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். இதுபோல, மேற்கு வங்காளத்திலும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனிடையே ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுலம், பாடுகுபாடு ( PADUGUPADU ) உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. 

20 ஆண்டுகளுக்கு பிறகு மிக மோசமான ஃபானி புயல்


காலை 8 மணியில் இருந்து காலை 11 மணிக்குள் ஃபானி புயல் கரையை கடக்கும்

கோரதாண்டவம் ஆடும் ஃபானி : நிலை என்ன ? - துரைசாமி, ஒடிசாவில் வாழும் தமிழர்

பயமுறுத்தும் ஃபானி புயல்... ஒடிசாவில் நிலை என்ன?


அடுத்த 6 மணி நேரத்திற்கு ஒடிசாவில் மோசமான வானிலை நிலவும் - வானிலை மையம் எச்சரிக்கை


அசுர புயல் வீசி வரும் நிலையில் ஒடிசாவின் தலைமை செயலாளர், அனைத்து துறை அதிகாரிகளோடு ஆலோசனை

காலை 8 மணியில் இருந்து காலை 11 மணிக்குள் ஃபானி புயல் கரையை கடக்கும்

காலை 8 மணியில் இருந்து காலை 11 மணிக்குள் ஃபானி புயல் கரையை கடக்கும்

Next Story

மேலும் செய்திகள்