சேலத்தில் பிரபல ரவுடி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

சேலம் வாழப்பாடி அருகே பிரபல ரவுடி போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
x
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சேலம் அருகே முறுக்கு வியாபாரி கணேசன் என்பவர்  கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பிரபல ரவுடி கதிர்வேலை போலீசார் தேடி வந்தனர். ஆனால் அவர் தலைமறைவாகி இருந்து வந்தார். இந்நிலையில், வாழப்பாடி அருகே காரிப்பட்டி பகுதியில் ரவுடி கதிர்வேல் மறைந்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் கதிர்வேலை பிடிக்க முயன்றனர். அப்போது போலீசாரை கதிர்வேல் ஆயுதங்களை கொண்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தற்காப்புக்காக கதிர்வேலை போலீஸ் சுட்டுக்கொன்றதாக தெரிகிறது. படுகாயம் அடைந்த காவல் ஆய்வாளர் சுப்பிரமணியம், உள்ளிட்ட 3 பேர்  சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுட்டுக்கொல்லப்பட்ட கதிர்வேல் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ரவுடி கதிர்வேலின் கூட்டாளிகள் 5 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்ல பட்ட கதிர்வேலுவின் பின்னணி என்ன?

Next Story

மேலும் செய்திகள்