முல்லை பெரியாறு அணையில் துணைக்குழு ஆய்வு

முல்லைப் பெரியாறு அணையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் பராமரிப்பு குறித்து துணைக் கண்காணிப்பு குழுத் தலைவரான மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணக்குமார் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்
முல்லை பெரியாறு அணையில் துணைக்குழு ஆய்வு
x
கோடைகாலத்தில் முல்லைப் பெரியாறு அணையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் பராமரிப்பு குறித்து துணைக் கண்காணிப்பு குழுத் தலைவரான மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணக்குமார் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.இந்தக் குழுவில், தமிழக பிரதிநிதிகளாக பெரியாறு அணை சிறப்பு கோட்ட செயற்பொறியாளர் சுப்பிரமணி, உதவி செயற்பொறியாளர் சாம் இர்வின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்தக்  குழு பேபி அணை, மதகு மற்றும் மழை அளவு, நீர்வரத்து, நீர் வெளியேற்றம், கசிவுநீர் குறித்து ஆய்வு செய்து வருகிறது. இதைத்தொடர்ந்து துணைக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி அணை நீர்மட்டம் 115 அடியாக இருந்தபோது ஆய்வு செய்யப்பட்டது. தற்போது  அணையின்  நீர்மட்டம் 112 புள்ளி 80 அடியாக  உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்