"ஆஷா பணியாளர்களை பணியமர்த்தினால் திருட்டு நடக்காது" - டாக்டர் ரவீந்திரநாத்

"தொட்டில் குழந்தை திட்டம் உள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்"
ஆஷா பணியாளர்களை பணியமர்த்தினால் திருட்டு நடக்காது - டாக்டர் ரவீந்திரநாத்
x
"அரசு மருத்துவமனைகளில் கருத்தரிப்பு மையங்கள் குறைவு"

"பிரசவத்துக்கு செலவிட முடியாமல் குழந்தை விற்கப்படுகிறது"

அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசு திட்டமான ஆஷா பணியாளர்களை நியமித்தால் குழந்தை திருட்டு நடைபெறாது என சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் ரவீந்திரநாத் கூறியுள்ளார். குழந்தைகள் விற்பனை இந்தியாவில்தான் அதிகம் என்று குறிப்பிட்ட அவர், ராசிபுரத்தில் நடப்பது போன்ற சம்பவங்கள் தற்போதுதான் முதன் முறையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். பெற்றோர்களால் கைவிடப்படும் குழந்தைகளுக்காக தொட்டில் குழந்தை திட்டம் உள்ளதையும் டாக்டர் ரவீந்திரநாத்  சுட்டிக்காட்டினார். இது குறித்து பேசியுள்ள டாக்டர் சாந்தி, அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவு கருத்தரிப்பு  மையங்கள் இல்லாததால், தனியார் மையங்களுக்கு செல்லும் தாய்மார்களும் குழந்தை விற்பனையில் ஈடுபடுவதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்