எந்தப் பெண்களையும் தொடமாட்டேன் கதறும் இளைஞர் வீடியோ

கை கால்களை கட்டிப்போட்டு தாக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
x
இளைஞர் ஒருவர், தனது தலையில் காலணியை வைத்துக் கொண்டு கதறும் வீடியோ ஒன்று திருச்சி பகுதியில் வேகமாக பரவி வருகிறது. பெண்களை இனி பலாத்காரம் செய்யமாட்டேன், என்ற கதறலுடன் முதல் வீடியோ வெளியானது. அதைத் தொடர்ந்து, சிறுமி முதல், வயதில் மூத்த  பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் செல்பி காட்சிகள் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளது. சிறிது நேரத்தில் பின்புறமாக கைகால்கள் கட்டப்பட்டு கீழே கிடந்தபடி அவன் கதறி அழும் வீடியோவும் வந்தது. தலை உள்ளிட்ட பாகங்களில் ரத்தம் வழிந்து, இளைஞன் படுத்திருக்கும் பகுதி எங்கும் ரத்தம் சிதறிக் கிடக்கிறது. அவனை கட்டிப்போட்டு தாக்கும் ஒரு குரல் மட்டும் கடுமையாக எச்சரித்து ​கொண்டிக்கிறது. சிறிது நேரத்தில் அந்த இளைஞனின் தலையை அறுத்துக் கொல்லப் போவதாக கூறப்படும் வீடியோவில், அவ்வாறு செய்ய வேண்டாம் என்ற மூதாட்டி ஒருவரின் குரலும் இயல்பாக கேட்கிறது. விசாரணையில், வீடியோவில் கதறும் நபர் திருச்சி பீமநகரை சேர்ந்த மணி என்பதும், தற்போது அவனுடைய நிலை என்ன என்பதும் தெரியவில்லை. தாம் பாலக்கரை காவல் நிலையத்தில் இருப்பதாக அந்த இளைஞன் கூறிய நிலையில், அது காவல் நிலையமே இல்லை, அது சார்ந்து எந்தப் புகாரும் தங்களுக்கு வரவில்லை என பாலக்கரை காவல் நிலைய போலீசார் கூறியுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்