பண தகராறில் மனைவியை காதலியாக நடிக்க வைத்த கணவர்

போரூரில் பணத்தகராறில் மனைவியை காதலியாக நடிக்க வைத்து வாலிபரை, கடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.
பண தகராறில் மனைவியை காதலியாக நடிக்க வைத்த கணவர்
x
போரூரில் பணத்தகராறில் மனைவியை காதலியாக நடிக்க வைத்து வாலிபரை, கடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருபவர் போரூரை சேர்ந்த சதீஷ் குமார். தனது நண்பரை பார்க்க, உறவினர் பிரகாசை அழைத்து சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சதீஷ்குமாரை தாக்கி, கடத்தி சென்றுள்ளனர். இதுகுறித்து பிரகாஷ் அளித்த புகாரில், உதவி கமிஷனர் பாபு தலைமையில் சதிஷ்குமாரை மீட்க தனிப்படை அமைக்கப்பட்டது. வேலூரில் ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சதீஷ் குமாரை மீட்டனர். அத்துடன் அவரை கடத்திச் சென்ற இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், பணத்தகராறில் மனைவியை, காதலியாக நடிக்க வைத்து வாலிபரை கடத்தியது தெரியவந்தது.மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள இந்துமதியை போலீசார் தேடி வருகின்றனர். பணத் தகராறில் மனைவியை காதலியாக நடிக்க வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


Next Story

மேலும் செய்திகள்