பிரதமருக்கு எதிராக போட்டியிடும் 40 தமிழக விவசாயிகள் - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தகவல்

மோடி ஆட்சியில் விவசாயிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட விவசாய விரோத நடவடிக்கைகளை கண்டித்து அவரை எதிர்த்து தாங்கள் போட்டியிடுவதாக தமிழ்நாடு விவசாயி சங்கங்களின் தலைவர் தெரிவித்துள்ளார்.
பிரதமருக்கு எதிராக போட்டியிடும் 40 தமிழக விவசாயிகள் - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தகவல்
x
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக, தமிழகத்தில் இருந்து 40 விவசாயிகள் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தமிழ்நாடு விவசாயி சங்கங்களின் தலைவர் தெய்வசிகாமணி தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், மோடிக்கு எதிராக போட்டியிட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், மோடி ஆட்சியில் விவசாயிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட விவசாய விரோத நடவடிக்கைகளை கண்டித்தும், அவர் மீண்டும் பிரதமரானால் நாடு மற்றும் விவசாயிகளுக்கு ஆபத்து என்ற அடிப்படையிலேயே, அவரை எதிர்த்து தாங்கள் போட்டியிடுவதாகவும் தெய்வசிகாமணி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்