திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட 8 பேர் - 8 பேர் கைது

சிசிடிவி காட்சிகளை கொண்டு கைது செய்த போலீசார்
திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட 8 பேர் -  8 பேர் கைது
x
பழனி பேருந்து நிலையத்தில் திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட 6 சிறுவர்கள் உட்பட 8 பேரை, சிசிடிவி காட்சிகளை கொண்டு பழனி மாநகர போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக பழனி முருகன் கோயிலுக்கு வந்து, பேருந்து நிலையத்திலேயே தங்கும் பக்தர்களின் பணம், நகைகள் திருட்டு போயுள்ளது. இது குறித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அங்கு சிசிடிவி பொருத்தி கண்காணித்து வந்தனர். இதன் மூலம் இருளப்பன், கணேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், 16 வயது முதல் 18 வயது வரையிலான 6 சிறுவர்களும் கைது செய்யப்பட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்