சூறாவளி காற்றுக்கு 1 லட்சம் வாழைகள் சேதம்...

நாங்குநேரி பகுதியில் கடும் சூறாவளிக் காற்றுடன் மழை பெய்ததால் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தன.
சூறாவளி காற்றுக்கு 1 லட்சம் வாழைகள் சேதம்...
x
நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியில் கடும் சூறாவளிக் காற்றுடன் மழை பெய்ததால் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தன. நாங்குநேரி மற்றும் சுற்று வட்டார கிராமங்களான சூரங்குடி, பெரும்பத்து, களக்காடு, திருக்குறுங்குடி, சிறுவளஞ்சி பகுதிகளில் ஏத்தன் வகை வாழைகள் பயிரிடப்பட்டிருந்த நிலையில், நன்கு விளைந்து வாழை குலைகளுடன் இருந்தன. ஆனால், கன மழையுடன் சூறாவளி காற்று வீசியதால் அவை வேரோடு சாய்ந்தன. இதுபோல, கலுங்கடி, மஞ்சன்குளம், வீரான்குளம், நாங்குநேரி, மறுகால்குறிச்சி, பிள்ளைகுளம்,சிங்கநேரி, ஏமன்குளம், இறைப்புவாரி உள்ளிட்ட கிராமங்களிலும் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாழை மரங்கள் சாய்ந்ததால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்