ஊழல் புகார் எதிரொலி - பட்டு கூட்டுறவு சங்க தலைவர் தகுதி நீக்கம்

காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்க நிர்வாக குழுவில் உள்ளவர்கள் ஊழல் செய்துள்ளதால் கூட்டுறவு சங்கத்தின் வருவாய் குறைந்துள்ளதாக புகார் எழுந்தது.
ஊழல் புகார் எதிரொலி - பட்டு கூட்டுறவு சங்க தலைவர் தகுதி நீக்கம்
x
காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்க நிர்வாக குழுவில் உள்ளவர்கள் ஊழல் செய்துள்ளதால் கூட்டுறவு சங்கத்தின் வருவாய் குறைந்துள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, தலைவராக உள்ள செல்வராஜ் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஏராளமான உறுப்பினர்கள் கைத்தறி துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் கைத்தறித் துறை இணை இயக்குனர் கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் ஊழல் நடைபெற்றதற்கான முகாந்திரம் இருந்ததால் கூட்டுறவுச் சங்கத்தின் நிர்வாக இயக்குனர் பிரகாஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், பட்டு கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக குழு தலைவரான செல்வராஜை தகுதி நீக்கம் செய்து இணை இயக்குனர் செல்வம் உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்