தூத்துக்குடியின் ஆயத்த ஆடை சாம்ராஜ்யம்... நலிந்துவரும் தொழில் மீட்கப்படுமா?

தூத்துக்குடி மாவட்டம் புதியமுத்தூரில், பல ஆண்டுகளாக வாக்குறுதிகள் மட்டும் கொடுத்துச்செல்லும் அரசியல் கட்சிகள், இந்த முறையாவது அதனை நிறைவேற்றுவார்களா என தொழிலாளர்கள் ஏக்கம் கொண்டுள்ளனர்.
x
* தூத்துக்குடி மாவட்டத்தின் ஆயத்த ஆடைகள் தயாரிப்பு களஞ்சியமாக செயல்பட்டுவருகிறது புதியமுத்தூர் ஊராட்சி. தமிழகத்தில் திருப்பூர் ஈரோட்டிற்கு அடுத்தபடியாக, ஆயத்த ஆடைகள் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு இந்த ஆயத்த ஆடை தயாரிப்பு தொழில் தான் வாழ்வாதாரம்.

* இங்கு தயாரிக்கப்படும் ஆடைகள் தமிழகம் மட்டுமல்லாது, மற்ற மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால் அதற்கு ஏற்ற போக்குவரத்து வசதிகள் ஏதும் இங்கு கிடையாது. புதியம்புத்தூரில் இருந்து சென்னைக்கு அரசு பேருந்துகள் ஏதும் இல்லை. ரயில் நிலையம் இல்லை. அருகே இருக்கும் தட்டாப்பறை ரயில் நிலையத்திலும் ரயில்கள் முறையாக நிற்பதில்லை என்பது தொழிலாளர்களின் கவலை.

* இருந்தபோதும், மற்ற மாநிலங்களில் இருந்து வாடிக்கையாளர்கள் கடும் சிரமங்களை கடந்து ஆடைகள் வாங்கி செல்கின்றனர். இதுமட்டுமல்லாமல் பணியாளர்கள் பற்றாக்குறை, மற்ற மாநில ஆடைகள் என பல பிரச்சினைகளை பட்டியலிடுகின்றனர், இங்குள்ள தொழிலாளர்கள். மத்திய, மாநில அரசுகள் மனது வைத்தால்,  புதியமுத்தூர் விரைவில் ஈரோடு திருப்பூர் போன்று ஆயத்த ஆடைகள் உற்பத்தியில் அடையாளம் பதிக்கும் என்பது இந்த பகுதி தொழிலாளர்களின் ஏக்கமாக உள்ளது. வழக்கம் போல வாக்குறுதிகளை கொடுத்து விட்டு சென்றுள்ள அரசியல்வாதிகள், இந்த முறையாவது நிறைவேற்றுவார்களா என்ற தாகம் தொழிலாளர்களிடம் தெளிவாக தெரிகிறது.

Next Story

மேலும் செய்திகள்