132 ஆண்டுகளை கடந்த ஓவியக்கல்லூரி

கும்பகோணத்தில் உள்ள 132 ஆண்டுகளை கடந்த அரசு கவின் கலைக்கல்லூரி
132 ஆண்டுகளை கடந்த ஓவியக்கல்லூரி
x
கும்பகோணத்தில் உள்ள 132 ஆண்டுகளை கடந்த அரசு கவின் கலைக்கல்லூரியில், சிறுவர்களின் உடல் ஆரோக்கியம், இயற்கை விளையாட்டை நினைவுப்படுத்தும் வகையில் ஜோயல் ஜெபகுமார் என்ற இளைஞர், ஒவியக் கண்காட்சி ஒன்றை வடிவமைத்தார். ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்ட இந்த ஓவியக்கல்லூரியில் பயின்ற பல்வேறு மாணவர்களும், பல்வேறு துறைகளிலும் புகழ்பெற்று விளங்கி வருகின்றனர். இந்நிலையில் இந்த கல்லூரியின் பயிலும் ஜோயல் ஜெபகுமார், கடந்த கால் நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை கிராமங்களில் நடந்த உடல் ஆரோக்கியம் தந்த விளையாட்டுகளை, தற்போதைய தலைமுறைக்கு எடுத்து கூறும் வகையில், பல்வேறு வகையான ஓவிய வடிவங்களை வடிவமைத்து காட்சிப்படுத்தினார். இவரது இந்த முயற்சி பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.  


Next Story

மேலும் செய்திகள்