பெண் பாலியல் புகார் - சிபிஐ இயக்குநர் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க, 3 நீதிபதிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
x
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க, 3 நீதிபதிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதிக்கு அடுத்த நிலையில், இருக்கும் நீதிபதி எஸ்.ஏ.போப்டே, தலைமையில் நீதிபதிகள் என்.வி.ரமணா, இந்திரா பானர்ஜி ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு நாளை மறுதினம் விசாரணையை தொடங்குகிறது. முதலில் பாலியல் குற்றம் சுமத்திய பெண்ணை ரகசிய அறையில் வைத்து விசாரிக்க நீதிபதிகள் குழு முடிவு செய்துள்ளது. இதற்காக அந்த பெண்ணுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த பெண் ஊழியர் குறித்த ஆவணங்களை தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்ற பதிவாளருக்கு அந்த குழு உத்தரவிட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்