இரட்டை இலை சின்னம் விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் சசிகலா தரப்பு சீராய்வு மனு தாக்கல்

இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பான தீர்ப்புக்கு எதிராக சசிகலா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
x
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு  பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டதால் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. பின்னர் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் அணிக்கு இரட்டை இலை சின்னம் மீண்டும் வழங்கப்பட்டது. இதை எதிர்த்து சசிகலா, தினகரன் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம்  தேர்தல் ஆணையத்தின் உத்தரவை உறுதி செய்தது. டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும், தேர்தல் ஆணையதின் உத்தரவுக்கு தடை கோரியும் சசிகலா, தினகரன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இது சசிகலா, தினகரன் தரப்புக்கு பின்னடைவாக கருதப்பட்டது. இந்நிலையில் சசிகலா தரப்பில் இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பான தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தனிக்கட்சியாக தினகரன் பதிவு செய்ததால் இவ்வழக்கில் அவர் மனுதாரராக 
சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்