தஞ்சை பெரியகோயிலில் இந்திமொழி கல்வெட்டு இல்லை - தொல்லியல் துறை அதிகாரிகள்

தஞ்சை பெரிய கோயிலில் புதிதாக இந்தி மொழி கல்வெட்டுகள் பதிக்கப்பட்டுள்ளதாக கூறுவது தவறானது என தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
x
ஆயிரம் ஆண்டுகள் பழமையான தஞ்சை பெரிய கோயில் சுவர் பராமரிப்பு பணி நடைபெற்றது. அப்போது, தமிழ் மொழி கல்வெட்டுகளை மாற்றி, இந்தி மொழி கல்வெட்டுகள் பதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. தமிழ் மன்னன் கட்டிய கோயிலில், இந்தியை பரப்பும் நோக்கில் கல்வெட்டுகள் மாற்றப்படுவதாக சமூக வளைதலங்களில் தகவல் பரவி வருகிறது. ஆனால், அந்த கல்வெட்டுகள் அனைத்தும் புதியவை அல்ல என்றும், கோயிலை சுற்றியும், தஞ்சையில் உள்ள மற்ற  இடங்களிலும் எடுக்கப்பட்டவை என தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். அவை மராத்தி மொழியில், கோயிலை எப்படி பராமரிக்க வேண்டும் என எழுதப்பட்டுள்ள கல்வெட்டுகள் என்றும்,  2ஆம் சரபோஜி மன்னர் கால கல்வெட்டுகள் எனவும் தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ், மராத்தி, கிரந்த எழுத்துக்கள் அவை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வலைதளங்களில் பரவிவரும் அனைத்து செய்திகளும் முற்றிலும் தவறானவை என்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்