வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கை நிராகரிப்பு - உயர்நீதிமன்றம்
பதிவு : ஏப்ரல் 23, 2019, 01:17 PM
ஸ்டெர்லைட் ஆலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்ய, தனிக்குழு அமைக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை, சென்னை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்ய, தனிக்குழு அமைக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை, சென்னை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது. 

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வேதாந்தா நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பராமரிப்பு பணிகளுக்காக ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும், பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்ய தனிக்குழு அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இதற்கு, ஏற்கனவே உயர்மட்ட குழு, மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழுக்கள் உள்ளதால், புதிய குழு அமைக்க தேவையில்லை என அரசு தரப்பு வழக்கறிஞர் ஆட்சேபம் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்காமல் வழக்கு விசாரணையை ஜூன் 11ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். இந்த வழக்கில் தன்னையும் ஒரு வாதியாக சேர்க்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்திருந்த வைகோ, விசாரணைக்காக வந்திருந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வைகோ, ஸ்டெர்லைட் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதே தவிர, வழக்கு குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை, என்றார்

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

443 views

பிற செய்திகள்

பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் - கமல்ஹாசனுக்கு தமிழிசை வேண்டுகோள்

கமல்ஹாசன் பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

17 views

மக்களவை தேர்தல் - நள்ளிரவில் முடிவு வெளியாகும்

நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நள்ளிரவுக்கு பிறகே தெரியவரும்

17 views

ராட்டினத்தில் அடிபட்டு சிறுவன் பலி

சென்னை மெரினா கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த எட்டு வயது சிறுவன் ராட்டினத்தில் அடிப்பட்டு இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

360 views

சுற்றுலா தலமாக மாறும் ஆவடி பருத்திப்பட்டு ஏரி பசுமை பூங்கா

சென்னை ஆவடி பருதிப்பட்டு ஏரி பசுமை பூங்கா இம்மாதம் திறக்கப்படுகிறது.

39 views

அதானி குழும ரயில் வழித்தடம் அமைக்க எதிர்ப்பு - கிராம மக்கள் போராட்டம்

மீஞ்சூர் அருகே அதானி குழுமத்தின் துறைமுகத்தில் சரக்குகளை கையாளுவதற்காக ரயில் வழித்தடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

137 views

அகில இந்திய அளவிலான கூடைபந்து போட்டி

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தேசிய அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்று வருகின்றது.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.