தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை - திங்கள் கிழமை முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கு திங்கள் கிழமை முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனரகம் அறிவித்துள்ளது.
x
இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ்  2019-20 ஆம் கல்வியாண்டிற்கான 25 சதவீத இட ஒதுக்கீடு மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது. குறிப்பாக இந்தாண்டு குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் சுமார் 1 லட்சத்திற்கு மேற்பட்ட இடங்கள் உள்ளன. சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகள் தொடக்கநிலை வகுப்புகளில் உள்ள மொத்த இடங்களில் 25 சதவீதம் இடங்கள் ஆன்லைன் மூலம் நிரப்புவதற்கு  பள்ளியின் தகவல் பலகையில் அறிவிப்பு செய்ய வேண்டும். பெற்றோர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம் வட்டார கல்வி அலுவலர் அலுவலகம் போன்றவற்றில் விண்ணப்பம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த அலுவலகங்களில் விண்ணப்பத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். பெற்றோர்களும், பள்ளிகளும் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து ஏப்ரல் 22ஆம் தேதி முதல் மே 18ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு விண்ணப்பம் செய்வதற்கு தேவையான சாதிசான்றிதழ், இருப்பிட சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ் உள்ளிட்டவற்றை முன்கூட்டியே அந்த துறையிடம் இருந்து பெற்று தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். 


Next Story

மேலும் செய்திகள்