பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு : ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் 91.30%

இன்று வெளியான பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் ஒட்டு மொத்தமாக 91 புள்ளி மூன்று பூஜ்ஜியம் சதவீத மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.
x
2018-19 கல்வியாண்டுக்கான பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மாதம் ஒன்றாம் தேதி தொடங்கி மார்ச் 19ஆம் தேதியுடன் நிறைவுபெற்றது. 7 ஆயிரத்து 82 மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், தனித் தேர்வர்கள் உள்பட மொத்தம் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 பேர் இந்த தேர்வை எழுதினர். இதற்கான முடிவுகள் இன்று வெளியானது. ஒட்டு மொத்தமாக 91 புள்ளி மூன்று பூஜ்ஜியம் சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 93 புள்ளி ஆறு நான்கு சதவீதமும், மாணவர்கள் 88 புள்ளி ஐந்து ஏழு சதவீதமும் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். மாணவர்களைவிட மாணவிகள் 5 புள்ளி பூஜ்ஜியம் ஏழு சதவீதம் அதிக தேர்ச்சி கண்டுள்ளனர். மேலும், மாவட்ட அளவில் திருப்பூர் 95 புள்ளி மூன்று ஏழு சதவீதம் தேர்ச்சி பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. 95 புள்ளி இரண்டு மூன்று சதவீதம் தேர்ச்சி பெற்று ஈரோடு 2-வது இடத்திலும்,  95 புள்ளி ஒன்று ஐந்து சதவீதம் தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மூன்றாவது இடத்திலும் இருக்கிறது. 

Next Story

மேலும் செய்திகள்