பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி கருத்தரங்கம்
பதிவு : ஏப்ரல் 11, 2019, 03:49 PM
ஆதித்தனார் நர்சிங் கல்லூரியில் ஆரோக்கியமற்ற வாழ்வுமுறை நோய்கள் குறித்து கருத்தரங்கம்
திருச்செந்தூர்  பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியில், மனிதனின் ஆரோக்கியமற்ற வாழ்வு முறையால் ஏற்படும் நோய்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்த மாநில அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், கல்லூரி முதல்வர் கலை குருசெல்வி வரவேற்புரை ஆற்றினார். ஆரோக்கியமற்ற வாழ்வு முறையால் ஏற்படும் பிரச்சினைகளை தடுப்பது குறித்து கல்லூரி செயலாளர்  சுப்பிரமணியம், இதயத்தின் ஆரோக்கியம் குறித்து டாக்டர் பாலமுருகன், உடல் பருமன் குறித்து டாக்டர் மதன் ஆகியோர் உரையாற்றினர். 

புற்று நோய் குறித்து டாக்டர் செல்வராஜ், ஆரோக்கியமான எண்ணம் மற்றும் வாழ்வு குறித்து ரஞ்சித் குமார் ஆகியோர் மாணவர்களிடம் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர். கல்லூரி இணை பேராசிரியர் பெண்ணரசி, நோய் தடுப்பு முறை குறித்து உரையாற்றினார். கருத்தரங்கில் பங்குபெற்ற மாணவிகளுக்கு, திருச்செந்தூர் ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட் ராமராஜ் சான்றிதழ்கள் வழங்கினார்.

பிற செய்திகள்

ஆட்சியை கலைக்க திமுக எம்.எல்.ஏக்கள் விரும்ப மாட்டார்கள் - அ.ம.மு.க., பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நம்பிக்கை

தமிழகத்தில் அதிமுக ஆட்சியை கலைக்க, திமுக எம்.எல்.ஏக்கள் விரும்ப மாட்டார்கள் என்று அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

6 views

கொடநாடு விவகாரம் குறித்து ஸ்டாலின் அவதூறு பேச்சு - ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு பதிவு

கொடநாடு கொலை விவகாரத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை இணைத்து அவதூறு பேசியதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மீது மதுரை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த

6 views

காஷ்மீரில் கைது செய்யப்பட்டு, வீட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

காஷ்மீரில் கைது செய்யப்பட்டு, வீட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி, புதுடெல்லியில் வருகிற 22 ம் தேதி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

7 views

உன்னாவ் பாலியல் வழக்கு : சிபிஐக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்த பெண், பாலியல் வன்கொடுமைக்குள்ளான நிலையில், அவரது குடும்பத்தை விபத்து ஏற்படுத்தி கொலை செய்ய முயன்ற விவகாரம் தொடர்பான வழக்கு சிபிஐ வசம் உள்ளது.

21 views

"பெட்ரோல், டீசலுக்கு ஜி.எஸ்.டி. வரி வேண்டும்" : மேற்குவங்கத்தில் லாரிகள் வேலை நிறுத்தம்

பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர கோரி, மேற்குவங்கத்தில், லாரி உரிமையாளர்கள், காலவரையற்ற வேலை நிறுத்தத்தை ​தொடங்கியுள்ளனர்.

202 views

ஹிட்டடிக்கும் துருவ் விக்ரமின் பாடல்

விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் உருவான 'வர்மா' படம் முற்றிலுமாக எடுக்கப்பட்ட நிலையில், அந்த படம் கைவிடப்பட்டு 'ஆதித்ய வர்மா' என்ற பெயரில் புதிதாக படமாக்கப்பட்டு வருகிறது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.