சொத்து பிரச்சினை தந்தையை கொல்ல கூலிப்படை -விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்
பதிவு : ஏப்ரல் 11, 2019, 12:40 AM
சேலம் மாவட்டம் மேட்டூரில் பட்டா கத்தி, நாட்டு வெடிகுண்டுகளுடன் கூலிப்படையினர் சிக்கியுள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்பட்டுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூரை அருகே கருமலை கூடல் காவல்துறை ஆய்வாளர் ஞானசேகர் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அருள்செல்வன் மற்றும் கோவிந்தராஜ் ஆகியோர் வந்த காரை நிறுத்தி போலீசார் விசாரித்தபோது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். அவர்களது காரை சோதனையிட்டதில் அதில், 12 நாட்டு வெடிகுண்டுகள், 7 பட்டாகத்திகள், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் என 5 லட்சம்  ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அதிர்ச்சியடைந்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டதில், அரவிந்த‌ன் என்பவர் சொத்துபிரச்சினை காரணமாக தன் தந்தையை கொல்வதற்காக தனது நண்பரான அருள் செல்வனிடம் உதவி கேட்டது தெரிய வந்த‌து. அவரை கொல்வதற்காகவே,இளம்பள்ளியை சேர்ந்த கோவிந்தராஜை\ அழைத்துகொண்டு சென்று கொண்டிருப்பதாக அருள் செல்வன் கூறியுள்ளார். இந்த தகவல்களை தொடர்ந்து வழக்கு பதிவுசெய்த போலீசார்,தந்தையை கொல்ல கூலிப்படையை ஏவிய அரவிந்தனை தீவிரமாக தேடி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசல் விலையை கொண்டு வர கோரிக்கை

பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வலியுறுத்தி சேலத்தில் மோட்டார் வாகன தொழிலாளர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்

31 views

பெங்களூருக்கு அனுப்பப்படும் நுங்குகள் : வறட்சியின் காரணமாக விலை உயர்வு

சேலம் மாவட்டம், ஓமலூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பெங்களூருக்கு அனுப்பப்படும் நுங்குகள், வறட்சியின் காரணமாக விலை அதிகரித்துள்ளது.

31 views

மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி...

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் அருள்குமார் என்பவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

452 views

பிற செய்திகள்

'ஆடை' பட போஸ்டருக்கு கடும் எதிர்ப்பு

நடிகை அமலாபால் நடித்து திரைக்கு வரும் ஆடை என்ற திரைப்படத்தின் போஸ்டர்கள் ஒட்டவும், பேனர்கள் அமைக்கவும் தடை விதிக்க கோரி டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது

15 views

பெட்ரோல் சேமிப்பு மெஷின் : மாணவர்கள் கண்டுபிடிப்பு

குறைந்த செலவில், பெட்ரோலை சேமிக்க உதவும் மெஷினை கண்டுபிடித்து, கோவை அரசினர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

5 views

தமிழோ, தெலுங்கோ வேலைக்கு ஆள் வேணும் - எஸ். ஆர். எம்.யூ தலைவர் ராஜா ஸ்ரீ தர் விளக்கம்

பிற மாநிலத்தவர்களை, இங்குள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்ய தமிழக அரசு அனுமதித்ததே, பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள், ரெயில்வே துறையில் அதிகவேலை பெற காரணம் என்று எஸ். ஆர்.எம்.யூ தலைவர் ராஜா ஸ்ரீ தர் தெரிவித்துள்ளார்.

151 views

"பணி வழங்காவிட்டால், போராட்டம் தொடரும்" - இந்திய கம்யூ., மூத்த தலைவர் நல்லகண்ணு

திருவள்ளூரை அடுத்த அதிகத்தூரில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட 173 தொழிலாளர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

11 views

குழந்தை கடத்தல் விவகாரம் : புதிய தகவல்

சென்னை - சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 3 வயது ஆண் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் புதிய தகவல் வெளியாகி உள்ளது.

19 views

பொறியியல் கலந்தாய்வின் முதல் கட்டத்தில், 6 ஆயிரத்து 740 மாணவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீடு

ஆன்லைன் பொறியியல் கலந்தாய்வின் முதல் கட்டத்தில், 6 ஆயிரத்து 740 மாணவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.