ஏ.ஆர்.முருகதாஸின் புதிய படத்தின் ரஜினியின் தோற்றம் வெளியானதால் அதிர்ச்சி
ரஜினி புகைப்படம் வெளியானதால், படக்குழு அதிர்ச்சி
ஏ.ஆர்.முருகதாஸின் புதிய படத்தில், ரஜினியின் தோற்றம் குறித்த புகைப்படம் வெளியானதால், படக்குழு அதிர்ச்சியடைந்தது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு, அவர்கள் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப சென்னையில் உள்ள ஸ்டூடியோவில் போட்டோ ஷூட் நடத்தப்பட்டது. ரஜினிகாந்துக்கு போலீஸ் உடை அணிவித்து புகைப்படம் எடுத்துள்ளனர். ரகசியமாக இந்த வேலை நடந்தாலும், அந்த புகைப்படம் வெளியாகி, சமூக வலை தளத்தில் பரவி வருகிறது. இந்நிலையில், அதிகாரப்பூர்வமான முதல் போஸ்டர், ஏப்ரல் 10ம் தேதி வெளியாகிறது.
Next Story
