குடிபோதையில் பேருந்து கண்ணாடி உடைப்பு : 2 இளைஞர்களை கைது செய்த போலீஸ்

சென்னை காசிமேட்டில் அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குடிபோதையில் பேருந்து கண்ணாடி உடைப்பு : 2 இளைஞர்களை கைது செய்த போலீஸ்
x
சென்னை காசிமேட்டில் அரசு பேருந்தின்  கண்ணாடியை உடைத்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தண்டையார் பேட்டை  பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பிராட்வே சென்று கொண்டிருந்த மாநகர பேருந்து மீது குடிபோதையில் இருந்த இரண்டு இளைஞர்கள் கல் வீசி தாக்கியுள்ளனர். இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி முழுவதும் உடைந்து சேதமடைந்தது  மேலும் நடத்துனர் பெரியசாமியை தகாதவார்த்தைகளால் திட்டியுள்ளனர்   இதனையடுத்து பேருந்து ஓட்டுனர் சரவணன் காசிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து காசிமேடு பகுதியை சேர்ந்த பிரசாந்த், குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்