லாரியிலிருந்து பறந்து பைக்கில் விழுந்த டயர் : பைக்கில் வந்த இளம்பெண் உயிரிழப்பு

செங்குன்றம் அருகே இரண்டு சக்கர வாகனத்தில் வந்த பெண்கள் மீது லாரியின் டயர் பறந்து விழுந்ததில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
லாரியிலிருந்து பறந்து பைக்கில் விழுந்த டயர் : பைக்கில் வந்த இளம்பெண் உயிரிழப்பு
x
செங்குன்றம் அருகே இரண்டு சக்கர வாகனத்தில் வந்த பெண்கள் மீது லாரியின் டயர் பறந்து விழுந்ததில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். கவிதா மற்றும் அவரின் தங்கை சாருலதா வயது 17 ஆகிய இருவரும் செங்குன்றத்தில் உள்ள தனது உறவினரை பார்த்துவிட்டு மறுபடியும் பாடியில் உள்ள தங்களது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது  சாலையின் எதிர் பக்கத்தில் வந்த லாரியின் மேல் இருந்து டயர் பறந்துவந்து இவர்களுடைய இருசக்கர வாகனத்தில் விழுந்தது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த கவிதா சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.  படுகாயமடைந்த தங்கை சாருலதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

Next Story

மேலும் செய்திகள்