"அமமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது" - தங்க தமிழ்ச்செல்வன்

தேனி தொகுதி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் நம்பிக்கை
x
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரில் கைரேகை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி உயிர் நீத்த 16 பேரின் 100வது ஆண்டு நினைவு நாளையொட்டி, அமமுக சார்பில் தேனி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்  பரமசிவஐயப்பன் ஆகியோர் மரியாதை செய்தனர். பின்னர் தங்க தமிழ்செல்வன் செய்தியாளர்களிடம்  பேசும்போது, அமமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார். அதேநேரம் சம்பளத்துக்கு ஆட்களை வைத்து வாக்கு சேகரிப்பில் அதிமுக ஈடுபடுகிறது என்றும், அதிமுக தோற்பது உறுதி என்றும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்